அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால்டனை நியமித்தார்!
ஐ.நா.வுக்கான முன்னாள் தூதர் ஜான் பால்டனை அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள மெக் மாஸ்டருக்கு பதிலாக ஜான் பால்டன் நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் ஏப்ரல் 9-ஆம் தேதி ஜான் பால்டன் பதவியேற்றுகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
மெக்மாஸ்டர் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவர் என்றும் தமது நண்பராகத் தொடர்வார் என்றும் டிரம்ப் பதிவிட்டுள்ளார். டிரம்ப் பதவியேற்றதில் இருந்து 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாற்றப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாற்றத்துக்கு ஈரான் மற்றும் வடகொரியா சார்ந்த கொள்கை முடிவு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.