அதிசயம் இனி மின்சாரம் வேண்டாம்…செயற்கை நிலவுவை தயாரிக்கும் சீனா….வியப்பில் உலகநாடுகள்….!!

Default Image
சீனாவில் நகர்ப்புறங்களில் மின்சாரச் செலவினங்களைக் குறைப்பதற்காக தெரு விளக்குகளுக்குப் பதிலாக ‘செயற்கை நிலவை’ 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யும் என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரம் இதற்காகவென்றே “ஒளிபாய்ச்சும் சாட்டிலைட்களை” உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவை உண்மையான நிலவுடன் சேர்ந்து வெளிச்சம் பாய்ச்சும் ஆனால் உண்மையான நிலவைக் காட்டிலும் 8 மடங்கு அதிவெளிச்சம் பாய்ச்சும் சாட்டிலைட்களாக இது இருக்கும் என்று சீன ஊடகம் தெரிவிக்கிறது.
மனிதனால் உருவாக்கப்படும் இந்த செயற்கைச் சந்திரன் ஜீசாங் சாட்டிலைட் லாஞ்ச் செண்டரிலிருந்து சிச்சுவானில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2020-ல் முதல் அறிமுகம் பிறகு 2022-ல் மேலும் 3 செயற்கை நிலவுகள் சீன வானில் ஒளிரும்.
2020 அறிமுகம் பரிசோதனை முயற்சி என்றால் 2022-ல் இது முழு சக்தியுடனான வர்த்தக ஆற்றல் மிக்க கண்டுபிடிப்பாக இருக்கும் என்று சீனா கூறுகிறது.
சூரியனிலிருந்து ஒளிபெற்று பூமியில் பாய்ச்சும் இத்தகைய செயற்கை நிலவு ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலர்கள் வரை மின்சாரச் செலவினங்களைக் குறைக்கும் என்று சீனா கூறுகிறது. மனிதனால் உருவாக்கப்படும் இந்த செயற்கை நிலவுகள் 50 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு வரை வெளிச்சம் பாய்ச்சும்.
விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யாவை விஞ்சத் துடிக்கும் சீனா இன்னும் சில லட்சியத் திட்டங்களை வைத்துள்ளது இதில் Chang’e-4 lunar probe மிக முக்கியமானதாகும், நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்யும் இது சீன புராணத்தில் நிலாத் தேவதையின் பெயரைக் கொண்டுள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் செலுத்தப்படவுள்ளது.
சூரிய ஒளியை பூமிக்குப் பிரதிபலிக்கச் செய்யும் முயற்சியில் சீனா முதன் முதலாக ஈடுபட்ட நாடாகாது. முன்னர், 1990-ல் ரஷ்யாவில் ராட்சத கண்ணாடிகளை வைத்து சூரிய ஒளியை மறுபிரதிபலிப்பு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்துக்கு அப்போது ஸ்னாம்யா அல்லது பேனர் என்று பெயர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்