அதிசயம்…ஆச்சரியம்….உண்மை…சொந்தமாக நிலாவை தயாரிக்கும் நாடு…!!
சமீபத்தில் சீனாவில் செயற்கை நிலவு தயாரிக்கும் திட்டம் பற்றிய செய்திகள் வந்தபோதும் பலரும் நம்பவில்லை. உண்மையில் சீனாவின் டியான் ஃபியூ நியூ ஏரியா சயின்ஸ் சொசைட்டி இதைச் செய்துகொண்டிருக்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
உலக நாடுகளுக்கு மத்தியில் சீனா உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எப்போதுமே வாரண்டி-கேரண்ட்டி இல்லை என்கிற கருத்து நிலவி வருகிறது. உடனடியாக சிதையக்கூடிய, எளிதில் அழிந்துவிடக்கூடிய பொருட்களையே சீனா உற்பத்தி செய்வதாக வெளிவந்த கருத்துக்களால் சீனா கோபப்பட்டவிட்டதோ என்னவோ தெரியவில்லை, வெடிபொருட்கள் தொடங்கி அணுகுண்டு வரை , நொடியில் வெடிக்கும்-அழிக்கும் தொழில்நுட்பத்திலும் அவர்கள் கைதேர்ந்து வருகிறார்கள்.
அவ்வகையில் ஒரு சீன டார்ச் லைட் வாங்குவதற்கே நாம் யோசிப்பது உண்டு. காரணம் அது நீடித்து உழைக்குமா என்பதுதான். ஆனால் செயற்கை நிலாக்களை உற்பத்தி செய்து விண்ணுக்கு அனுப்பி, நகரத்தின் மின்சாரத் தேவைகளை சேமிக்கும் முயற்சியில் 2022-ம் ஆண்டினை இலக்காக வைத்து சீனா செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற செயற்கை துணைக்கோள்கள் இயற்கையான நிலவை விடவும் பல மடங்கு வெளிச்சமாக ஒளிரும் என்றும் கூறப்படுகிறது.
DINASUVADU