அண்ணா அறிவாலயத்தில் வைக்க தயாராகும் கருணாநிதியின் முழு உருவ சிலை…!!!

Default Image

மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் உருவச்சிலை விரைவில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் சிலை அறிவாலயத்தில் முன் பகுதியில் அமைந்துள்ள நிலையில், அதற்க்கு அருகிலேயே கருணாநிதியின் முழு உருவாகி சிலையும் அமையவுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் கருணாநிதியின் சிலையை வடிவமைத்துள்ளார். சிலை தயாரிப்பு பணியை இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டார். சிலை தயாரிப்பு பணிகள் முழுமையடைந்த பிறகு சிலை திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்