துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் பெரியார் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை சேலத்தில் செருப்பால் அடித்தார் என்று கூறினார்.ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சர்ச்சை பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவருடைய உருவபொம்மைகள் எல்லாம் எரிக்கப்பட்டும், பல மாவட்டங்களில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரஜினி திடீரென்று செய்தியாளர்களை நேற்று சந்தித்தார் அதில் தன் பேச்சில் எந்த தவறும் இல்லை இல்லாத ஒன்றை சொல்லவில்லை ஆகையால் மன்னித்துவிடுங்கள் மன்னிப்பு கேட்கமுடியாது என்று கூறினார்.இந்நிலையில் இந்த பதில் இந்திய அளவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ட்ரண்டாகியது குறிப்பிடத்தக்கது
ரஜினியின் மன்னிப்பு கேட்க முடியாது என்ற கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை பாரட்டி கருத்து பதிவிட்டிருந்தார் அதில் ரஜினி கூறுவது சரியோ தவறோ ஆனால் அவர் எடுத்த நிலைப்பாட்டில் பயமில்லாமல் உறுதியோடு இருக்கிறார். அதற்கு என்னுடைய பாராட்டுகள். அவர் சொல்வது சரி அல்லது தவறு என்று கூற நான் நீதிபதி அல்ல. மிக முக்கியமானது எந்த வித பயமில்லாமல் தனது கருத்தை தெரிவிப்பதுதான். தற்போது அதை ரஜினிசெய்திருக்கிறார்” என்று அந்த பதில் கூறினார்.
நடிகை குஷ்புவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர் ரஜினி கூட நடிப்பதால் தான் அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்களா என்ற கேள்வியை குஷ்புவிடம் எழுப்பினார்.இதற்கு நடிகை குஷ்பு சற்று காட்டமாக பதிலளித்து உள்ளார்.இதுகுறித்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் அட லூசு பசங்களா நடிகர் ரஜினியுடன் 28 வருடத்திற்கு முன்பே நடிச்சு முடிச்சிட்டேன். எனக்கு இது புதுசு இல்ல. ஏன் முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க என்று கூறி பதிவிட்டு பதில் அளித்து உள்ளார்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…