அட இவ்வளவு தானா….!!!! கடலை மிட்டாய் செய்வது எப்படி தெரியுமா…?
கடலை மிட்டாய் நாம் அனைவரும் அறிந்த இனிப்பு வகை தான். இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை தான். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு வகை தான். தூத்துக்குடியில் இந்த மிட்டாய் ஸ்பேஷலான ஒரு இனிப்பு வகை. இப்போது இதனை எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- நிலக்கடலை – 3 கப்
- வெல்லம் – கால் கிலோ
செய்முறை :
கடாயில் எண்ணெய் இல்லாமல் நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி உடைத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காச்சி வேண்டும். பின்பு உடைத்த கடலை பருப்புடன் காய்ச்சிய பாகை ஊற்றி கிளறவும். சூடாக இருக்கும் போதே கத்தியால் கீறி துண்டுகளாக போடவும்.
பின் இன்சூடாக இருக்கும் பொது தனி தனியாக எடுக்கவும். சூடு ஆரிய பின் பரிமாறவும். இப்பொது நமக்கு தேவையான கடலை மிட்டாய் ரெடி.