அடுத்த கட்டத்தை நோக்கி முக. ஸ்டாலினின் நகர்வு..!!
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் கூறுகையில், வரும் 8-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திமுக தலைவராக முக. ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் அது மட்டும் இல்லாமல் முக.அழகிரின் தீடீர் அரசியல் பேச்சால் இந்த கூட்டம் அரசியலில் ஒரு பரபரப்பை எட்டியுள்ளது…
DINASUVADU