அடடே… கேழ்வரகுல கூட பக்கோடா செய்யலாமா…? அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!!!
பக்கோடாவை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பக்கோடா நமது அருகாமையில் உள்ள பேக்கரி கடைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். பக்கோடாவில் பல வகையான பக்கோடாக்கள் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு என்று கூட சொல்லலாம்.
பக்கோடாவை உணவிற்கு கூட்டாக கூட வைத்து சாப்பிடலாம். இப்பொது சுவையான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- கேழ்வரகு மாவு – அரை கப்
- மக்காக் சோளமாவு – அரை கப்
- மிளகாய் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 2
- நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி – 1 கைப்பிடி
- உப்பை – தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கேழ்வரகு, சோள மாவுகளுடன் சேர்க்க வேண்டும். பிறகு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து பக்கோடாவாக எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.
சோள மாவுக்கு பதிலாக கடலை மாவு சேர்க்கலாம். மழை காலங்களில் இந்த உணவை சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.