அடடே குழந்தைகளுக்கு பிறந்தவுடன் மொட்டை போடுவதற்கான இது தான் காரணமா ?
- குழந்தைக்கு மொட்டை போடுவதற்கான காரணம்.
குழந்தைகள் பெற்றோரின் ஒப்பற்ற செல்வம். தனது குழந்தைகளை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பெரியோரின் கடமையும், பாசமுமாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு எந்த காரியத்தில் குறைவு வைக்காமல் சரியாக செய்வார்கள் பெற்றோர்கள்.
பிறந்த குழந்தைக்கு மொட்டைபோடுதல்
குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள்ளாக மொட்டை போட வேண்டும் இல்லையென்றால், அது சாமி குற்றம் ஆகி விடும் என சொல்வார்கள். அனால், இதன் உண்மையான பின்னணி என்னவென்றால், தாயின் கருவறையில் குழந்தை இருக்கும் போது, கருவறையில் ரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில் தான் குழந்தை இருந்திருக்கும்.
இந்நிலையில், அதில் உள்ள கழிவுகள் நமது தலையில் தேங்கியிருக்கும். சாதாரணமாக நாம் நம் கைகளால் வேப்பிலையை அரைத்து அதை நம் கையால் தொட்டாலே, நாம் சோப்பு போடு கழுவின பின்பும் அந்த கசப்பு தன்மை நமது கைகளில் தென்படும்.
அசுத்தம் வெளியேறுதல்
இந்நிலையில், 10 மாதமாக தாயின் கருவறையில், இருக்கும் குழந்தையின் தலையில் தங்கியிருக்கும் அசுத்தம் எப்படிபட்டதாய் இருக்கும் என எண்ணி பாருங்கள். இதனை வெளியேறுவதற்கு ஒரே வழி மொட்டை அடிப்பதுதான். அவ்வாறு மொட்டை அடித்தால் தான், குழந்தையின் முடியின் வேர்க்கால்கள் வழியாக அந்த அசுத்தம் எல்லாம் வெளியேறிவிடும்.
இந்த உண்மையான காரணத்தை நாம் சொன்னால், அதனை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் தான், பெரியவர்கள், குழந்தை பிறந்து 10 மாதத்திற்குள்ளாக மொட்டை போடவில்லை என்றால் அது சாமி குற்றம் ஆகிவிடும் என்ற கட்டுக்கதைகளை கூறுகின்றனர்.
இரண்டாவது மொட்டை
சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு, 3 வயதிலும் ஒரு மொட்டை போடுவதுண்டு. இந்த மொட்டை எதற்காக போடப்படுகிறது என்றால், முதல் முட்டையில் வெளியேறாத கழிவுகள் ஏதேனும் இருந்தால், அது இந்த மொட்டையில் வெளியேறிவிடும் என்று தான் இந்த மொட்டை போடப்படுகிறது.
எந்த ஒரு காரியத்தையும் அதன் உண்மையான காரணத்தை சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதனை பயன் காட்டி தெய்வீக ரீதியாக கூறினால் தான், மக்கள் நம்புவார்கள் என்று நினைத்து தான் இப்படியெல்லாம் பெரியவர்கள் கூறுகிறார்கள்.