அச்சுறுத்தும் ஆளில்லா விமானத்தை அழிக்க கழுகிற்கு பயிற்சி…..!!
நெதர்லாந்த் நாட்டில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் பறக்க விடப்படும் பயமுறுத்தப்படும் ஆளில்லா விமானத்தை அழிக்க கழுகிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.நவீன விஞ்ஞான உலகில் ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டு , பல்வேறு வகையில் நன்மை ஏற்பட்டுள்ளது. அதே போல இந்த ஆளில்லா விமானம் மிகவும் அச்சுறுத்தும் விதத்திலும் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள காட்விக் விமான நிலையத்தின் விமான ஓடுப் பாதையில் ட்ரோன் நீண்ட நேரமமாக பறந்து கொண்டு இருந்தது.அப்போது பரந்த ட்ரோன் குறித்த விசாரணையில் விதிகளுக்கு மாறாக பறந்த அந்த ட்ரோனை, வெளியேற்ற ராணுவம் உடனடியாக அந்நாட்டு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அச்சுறுத்தும் வகையில் ட்ரோன் பிறந்ததால், விமானங்கள் மாற்று தளங்கள் வழியாக திருப்பி விடப்பட்டது.இந்த சம்பவத்தால் சில விமானங்கள் இரத்தும் செய்யப்பட்டன.
இதையடுத்து அச்சுறுத்தலாக பறக்கும் ட்ரோன்களை நாட்டின் பாதுகாப்பிற்க்காக அழிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாடுகளும் விதவிதமான யுத்திகளை பயன்படுத்தி அழித்து வருகின்றன.இந்நிலையில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் பறக்க விடப்படும் ட்ரோன்களை அழிக்க வேண்டுமென்று நெதர்லாந்து அரசு கழுகிற்கு பயிற்சி அளித்து வருவது வினோதமாக பார்க்கப்படுகின்றது. இந்த கழுகுகள் சந்தேகமாக வானில் பறக்கும் ட்ரோன்களை தன் நகங்களால் செயலிழக்க செய்கிறது.அச்சுறுத்தும் வகையில் பறக்க விடும் ட்ரோன்களை அழிக்க ‘ரேடார்’, ‘ஜாமிங்’, ‘நவீன துப்பாக்கி’, ‘எதிர்ப்பு ஒளிக்கதிர்கள்’ என்று பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வரும் சூழலில் கழுகுகளை பயன்படுத்தி ட்ரோனை அழிக்கும் நெதர்லாந்து நாட்டின் இந்த முயற்சி மற்ற நாடுகளை பிரமிக்க வைக்கின்றது.இதனால் இது வெர்சன் 2.0 என்று நெதர்லாந்து மார் தட்டிக் கொள்கிறது.