அச்சத்தில் பிலிப்பைன்ஸ் மக்கள்! வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலை…..
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தயார் நிலையில் இருப்பதால், அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்பே என்ற இடத்தில் உள்ள இந்த எரிமலை புகையைக் வெளியேற்றி வருவதால் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி சுமார் 27,000 கிராம மக்கள் அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில் இன்னும் சில மேயான் எரிமலை வெடிக்கவுள்ளது என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளன.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், “மேயான் எரிமலை கடந்த சில நாட்களாக லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி வந்தது. இதனால் அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது. மேயான் எரிமலை எப்போது வேண்டுமானலும் வெடிக்கலாம் என்பதால் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறுவுறுத்தப்பட்டுள்ளன” கூறியுள்ளனர்.
அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன் புகையை உமிழத்தொடங்கிய இந்த எரிமலை தற்போது வெடிக்கும் நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …