அக்ரோசத்தால் அடித்து நொருக்கிய இந்தியா..!கோல் மழைகளை பொழுந்து..! காலிறுதிக்குள் கால் வைத்தது..!!
உலகக்கோப்பை ஹாக்கி லீக் தொடரில் கனடாவை
இந்திய அணி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
உலகக்கோப்பை ஹாக்கி லீக் தொடரானது ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சி பிரிவில் இருக்கும் இந்தியாவுடன் கனடா அணி மோதியது. இதில் வெற்றி பெற்றால் தான் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் வீரர்கள் ஆட்டத்தில் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.
முதலில் இரு அணிகளும் தொடக்கத்தில் தலா ஒரு கோல் அடித்த நிலையில் இந்திய வீரர்களின் ஏகோபித்த ஆக்ரோசம் காட்டி தொடங்கியதுமே அடுத்தடுத்து அங்கு கோல் மழை பொழிந்தனர். கோல் மழையால் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதுள்ளது.இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை தன் வசப்படுத்திய இந்தியாவின் லலித் உபத்யாய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.