ஃப்ரூட்ஸ் தயிர் சாதம் : குழந்தைகளுக்காக..!
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு ஃப்ரூட்ஸ் சேர்த்து தயிர் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்,
பால் – அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது),
தயிர் – 2 டீஸ்பூன்,
திராட்சை (பச்சை, கறுப்பு) – தலா 10,
மாதுளை முத்துகள் – 2 டீஸ்பூன்,
கடுகு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி போட்டு தாளிக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்.
இதனுடன் பால், தயிர், தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.
இதை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால், மதியம் சாப்பிடும் போது கொஞ்சம்கூட புளிக்காது.
சூப்பரான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம் ரெடி.