கோவையில் போராடும் அதிமுகவினரின் பசியை போக்க உப்புமா, தக்காளி சோறு…!

கோவையில் போராடும் அதிமுகவினரின் பசியை போக்க உப்புமா, தக்காளி சோறு…!

Default Image

கோவையில் போராடும் அதிமுகவினரின் பசியை போக்க உப்புமா, தக்காளி சோறு.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 55 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவையில், வருமான வரி சோதனை நடைபெறும் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பாக குவிந்துள்ள அதிமுகவினருக்கு, காலையில் தோசை, பொங்கல், உப்புமா வழங்கப்பட்ட நிலையில், மதிய உணவாக தக்காளி சோறு, வெஜ் பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

Join our channel google news Youtube