இன்றைய ராசிபலன்கள் ..!உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் .!

Today Horoscope-மாசி மாதம் இருபதாம் தேதி[ மார்ச் 3, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கையும் பொறுமையும் தேவை, முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் இன்று நீங்கள் வன்மையாக நடந்து கொள்ளலாம் .இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,எண்ணெய்   பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

உங்கள் கடினமான உழைப்பின் மூலம் இன்று வெற்றி கிடைக்கும் .பணி நிமித்தம் காரணமாக பயணம் செய்வீர்கள். உங்கள் துணையுடன் ஆன உறவில் மகிழ்ச்சி காணப்படும் .இன்று பணவரவு காணப்படுகிறது, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

உங்கள் தகவல் பரிமாற்ற திறமை காரணமாக இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு செய்வது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் துணையுடன் அன்பும் அனுசரணியுமாக நடந்து கொள்வீர்கள். உங்கள் பண தேவை இன்று பூர்த்தி செய்யப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்று ஆன்மீக செயல்களில் ஈடுபடுவீர்கள் இதனால் மகிழ்ச்சியும் அடைவீர்கள், உங்களின் பணியிட சூழல் சுமூகமாக இருக்காது. உங்கள் துணையுடன் உங்களின் மாறுபட்ட  மனநிலையை காண்பிப்பீர்கள். இன்று பண பற்றாக்குறை ஏற்படும் .ஆரோக்கிய மேம்பாட்டிற்கு தியானம் மேற்கொள்வது சிறந்தது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைப்பது அரிது. பயணம் செய்யும்போதும் நடந்து செல்லும் போதும் கவனமாக இருக்க வேண்டும், உங்களின் பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. உங்கள் துணையுடன் மனம் திறந்து பேச தயங்குவீர்கள் .பணப்புழக்கம் குறைந்து காணப்படுகிறது .செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம் .நீரை அதிகமாக பருக வேண்டும்.

கன்னி:

இன்று மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் .உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

துலாம்:

இன்று உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், சில தடைகள் சந்திக்க நேரும் . உங்கள் சக பணியாளர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:

இன்று உங்கள் செயல்களை நேர்மையாகவும் நாணயமாகவும் செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு எதிரான சூழ்நிலை ஏற்படலாம், பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. உங்கள் துணையுடன் வன்மையாக நடந்து கொள்ள நேரலாம் இன்று பணவரவு காணப்படாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு:

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. சில கடினமான சூழ்நிலைகள் சந்திக்க நேரலாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பயணத்தின் போது பண இழப்புகள் நேரலாம் ,ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:

இன்றைய நாள் உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.  நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை சுமூகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படுகிறது.புதிய வாய்ப்புகள் வரலாம். உங்கள் துணையுடன் குடும்ப வளர்ச்சி குறித்து கலந்தாலோசிப்பீர்கள் .  பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

மீனம்:

உங்கள் அணுகு முறையில் எதார்த்தமும் ஒழுங்கு முறையும் தேவை. உங்கள் பணிகளை கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .உங்கள் துணையுடன் பேசும் போதும் வார்த்தைகளை நிதானமாக பேச வேண்டும். இன்று நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக காணப்படாது .ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment