இன்று நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு…!

டிஎன்பிஎஸ்சி  குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வு கடந்த மாதம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment