பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ் குண்டு’ – டிஜிபி பரபரப்பு தகவல்! நடந்தது என்ன?

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ் குண்டு’ என கேரள போலீசார் உறுதிசெய்துள்ளனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்ததாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேசிய கேரள மாநில டிஜிபி, இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக  தெரிவித்துள்ளார்.

கேரளா குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயனுடன் தொடர்புகொண்ட அமித்ஷா – அதிரடி உத்தரவு!

மேலும், தமிழ்நாட்டில் கேரள எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி வனப்பகுதிகளிலும் காவல்துறையினர், வனத்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு! பெண் ஒருவர் உயிரிழப்பு!

முதல்வரை தொடர்புகொண்ட அமித்ஷா

குண்டு வெடிப்பை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்துள்ளார். வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த பின், ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG (தேசிய புலனாய்வு முகமை), NIA (தேசிய பாதுகாப்பு படை) ஆகியவையும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்த அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

தீவிர விசாரணை

இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடித்த இடத்தில் NIA சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைத்த NIA அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வறுகின்றனர்.

சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை

இதற்கிடையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடுகாணி, எருமாடு, கனநல்லா உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.