காலம் கனிந்தது கதவுகள் திறந்தது – தாடி பாலாஜி நெகிழ்ச்சி.!

காமெடி நடிகர் பாலாஜி சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் பாலாஜி . விஜய், அஜித், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். பின், பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார். இந்நிலையில், தற்போது பாலாஜி சொந்தமாக bmw வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு” காலம் கனிந்தது கதவுகள் திறந்தது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கார் வாங்கிய பாலாஜிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.