நீட் தேர்வை எதிர்ப்பதற்கு இது தான் காரணம்! – டாக்டர்.ராமதாஸ்

ஏழை மாணவர்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை என்பதே நீட் தேர்வை எதிர்ப்பதற்கு காரணம்.

தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவரும், கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனுமான ஜீவித் குமார், நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து  ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால் அவர்கள் சாதிப்பார்கள் என்பதற்கு ஜீவித்குமாரின் சாதனை தான் உதாரணம். ஆனால், அனைத்து ஏழை மாணவர்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை என்பதே நீட் தேர்வை எதிர்ப்பதற்கு காரணம்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.