இது என்னுடைய குட் பை மெசேஜ்! பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி!

இது என்னுடைய குட் பை மெசேஜ்! பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி!

Default Image
  • பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி. 
  • நடிகை ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி. 

பிரபல சீரியல் நடிகையான ஜெயஸ்ரீ தேவதையை கண்டேன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு 5 வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து, அவரது கணவரான ஈஸ்வர், ஜெயஸ்ரீயுடன் நடிக்கும் மகாலக்ஷ்மி என்னும் பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டு தன்னையும், தனது மகளையும் கொடுமைப்படுத்துவதாக அவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் ஈஸ்வரை கைது செய்துள்ளனர். பின் பிணையில் வெளியே வந்த இவர், ஜெயஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கணவரிடம் தவறான முறையில் பழகுவதாக பேட்டி அளித்துள்ளார். இந்த பிரச்னை தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனையடுத்து, ஜெயஸ்ரீ மனமுடைந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் தற்கொலை செய்வதற்கு முன்பதாக அவரது தோழியின், அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

அந்த குறுஞ்செய்தியில், நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். வாழ்வதற்கு தகுதியற்றவளாக நான் உணர்கிறேன். இனிமேல் வாழ விரும்பவில்லை. எனக்கு இத்தனை நாள் ஆதரவளித்த உனக்கு நன்றி. என் அக்கா என்னிடம் எப்படிப் பேசுவாரோ அப்படி என்னிடம் நடந்து கொண்டாய். இது என்னுடைய குட் பை மெசேஜ்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஜெயஸ்ரீ தற்கொலை செய்ய முயற்சிப்பதை அறிந்த அவரது தோழி, ஜெயஸ்ரீயை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

Join our channel google news Youtube