அலோபதி மருத்துவ முறை தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை – பாபா ராம்தேவ்!

  • அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு அலோபதி முறை தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
  • தேவையற்ற மருந்துகளை உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை 

கடந்த மாதம் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை தான் கொரோனாவை குணப்படுத்தும் எனவும், தடுப்பூசி போட வேண்டும் என்று அவசியமில்லை எனவும் பாபா ராம்தேவ் சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். மேலும் கொரோனா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் செயல் திறன் குறித்த பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இதனையடுத்து இந்திய மருத்துவ சங்கம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், மத்திய சுகாதார அமைச்சகமும் பாபா ராம்தேவ் தனது கருத்தை வாபஸ் வாங்குமாறு ராம்தேவுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், பாபா ராம்தேவ் தனது அலோபதி மருத்துவ முறைதான் சிறந்தது என்ற கருத்திலிருந்து விலகா விட்டாலும், தடுப்பூசி குறித்த தனது நிலைப்பாட்டிலிருந்து தற்போது விலகி விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பாக பேசிய அவர் எங்களுக்கு எந்த ஒரு அமைப்பினருடன் பகை இருக்க முடியாது எனவும், நல்ல மருத்துவர்கள் அனைவருமே இந்த பூமிக்கு கடவுள் அனுப்பிய தூதர், இந்த கிரகத்திற்கு கொடுக்கப்பட்ட பரிசு என தெரிவித்துள்ளார்.

தேவையற்ற மருந்துகளை உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ள அவர், உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் குணப்படுத்த முடியாத கோளாறுகளையும் பண்டைய நடைமுறைகள் மூலம் குணப்படுத்தலாம் என யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal