அமெரிக்காவில் பரபரப்பு…கடற்கரை நடைபாதையில் துப்பாக்கிச்சூடு… 9 பேர் காயம்.!!

அமெரிக்காவின் ஹாலிவுட் எனும் இடத்தில் உள்ள புளோரிடாவில் கடற்கரை பிராட்வாக் அருகே நேற்று இரவு 7 மணியளவில் நூற்றுக்கணக்கானோர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 1 வயது முதல் 17 வயது வரையிலான 4 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மெமோரியல் பிராந்திய மருத்துவமனை மற்றும் ஜோ டிமாஜியோ குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த துப்பாக்கிசூடு மோதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடுவதைக் காணலாம்.

மேலும், இந்த  துப்பாக்கிசூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சந்தேக நபரை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர். திடீரென துப்பாக்கிசூடு நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.