வெந்து தணிந்தது காடு வீட்டை விட்டு போறேன் வழியை விடு! எலிமினேட் ஆன கூல் சுரேஷ்?

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் நாமினேஷன் நடைபெற்று அதில் தேர்ந்தடுக்கும் போட்டியாளர்களின் வாரம் வாரம் ஒருவர் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று  ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறார். அந்த வகையில், கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவின் மகள் ஜோதிகா குறைந்த வாக்குளை பெற்று வெளியேறினார்.

அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமான கடந்த வாரம் சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் வாக்களிக்க தவறினார்கள். இதனால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.  அதனை தொடர்ந்து இந்த வாரம் மக்கள் அனைவரும் வாக்கு அளித்துள்ளனர்.

கூல் சுரேஷ் சும்மா லிப் -ஸ்டிக் போட்டு நடிச்சிட்டு இருக்காரு! கடுமையாக விமர்சித்த சுசித்ரா! 

எனவே, கண்டிப்பாக இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் இருந்து வெளியேறியது வேறு யாரும் இல்லை கூல் சுரேஷ் தான் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விஷ்ணு,  கூல் சுரேஷ், அர்ச்சனா,  தினேஷ்,நிக்சன்,  ஆகிய போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள். இதில் கூல் சுரேஷ் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளாராம். கடந்த சில நாட்களாகவே தன்னுடைய குடும்பத்தை பார்க்கவேண்டும் என கூல் சுரேஷ் மனம் உருகி பேசி வந்தார். அது மட்டுமின்றி வீட்டில் இருந்து வெளியே ஏறி குதிகவும் முற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.