19 வயதிலேயே கேஜிஎப் படத்தில் சம்பவம் செய்த இளைஞர்.! குவியும் பாராட்டுக்கள்.!

பிரசாத் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 1 ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் 2 நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமேயில்லை.

 

இந்த நிலையில், பிரமாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் எடிட்டர் குறித்து வியப்பான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இந்தப் படத்திற்கு எடிட்டிங் செய்தவர் 19 வயது உஜ்வல் குல்கர்னி என்ற  இளைஞர் தான்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கேஜிஎப் படத்தின் ஒரு பாடலை உஜ்வல் குல்கர்னி தனது பாணியில் எடிட் செய்த வீடியோவை தனது சேனலில் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு அவரது எடிட்டிங் பிடித்து போக 19 வயதான உஜ்வல் குல்கர்னியை அழைத்து கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலரை கட் செய்யும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அனைவர்க்கும் பிடிக்கும் வகையில், உஜ்வல் பிரமாதமாக கேஜிஎப் 2- டிரைலரை  கட் செய்ய, மொத்த படத்திற்கான எடிட்டிங் வேலையையும் இயக்குனர் அவரிடமே கொடுத்துள்ளார். படத்தின் எடிட்டிங் பணி மிகவும் சவாலாக இருக்கும் ஆனாலும் அந்த பணியை சிறப்பாக செய்த உஜ்வல்-க்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.