சூப்பர் ஜோடி…விஜய் சேதுபதியின் 51வது படத்தில் அந்த இளம் நடிகை.!

சூப்பர் ஜோடி…விஜய் சேதுபதியின் 51வது படத்தில் அந்த இளம் நடிகை.!

VJS51 Rukmani

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான என்றால் அது விஜய் சேதுபதி என்றே சொல்லாம். நடிகராகவும் வில்லனாகவும் பாலிவுட் வரை கலக்கி வரும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படமும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படமும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

அந்த வகையில், அடுத்த ஆண்டும் மிக்பெரிய ஆண்டாக அமைய உள்ளது. அதன்படி, பாலிவுட்டில் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைபடத்தில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. மேலும், திரைத்துறையில் கால் பதித்து, அவரது ஐம்பதாவது படமான ‘மகாராஜா’ படமும் மற்றும் ‘விடுதலை 2’ ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக 2024-ல் வெளியாக காத்திருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, ஆறுமுககுமார் இயக்கும் அவரது 51 படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. இதில், கன்னட நடிகை ருக்கிமிணி கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்துள்ள அவரது புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

முக்கியமாக கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள ருக்மிணி வசந்த், ரக்ஷித் ஷெட்டி நடித்த ‘ஏழு கடல் தாண்டி’ படத்தில் கதாநாயகியாக நடித்து தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். மேலும் அவர், நானியை ஹீரோவாக வைத்து ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் தெலுங்கு மற்றும் தமிழ் இருமொழித் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதி 68 திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா?

மேலும், இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ‘விஜேஎஸ் 51’ படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த திரைப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக அமைந்து வருகிறது.

Join our channel google news Youtube