ஓபிஎஸ் மனு மீதான வழக்கு விசாரணைத் தொடங்கியது..!

0
15
ops26

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு விசாரணைத் தொடங்கியது.

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை இன்று காலை 10 மணிக்கு விசாரிக்க இருந்தனர்.

விசாரணை தொடங்கியது:

தற்பொழுது அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனோஜ்பாண்டியன் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற உள்ளது.

ஓ.பி.எஸ். தரப்பு வாதம்:

முன்னதாக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பொதுக்குழு வழக்கை விசாரித்து நீதிமன்றம் தள்ளிவைத்த நிலையில், அன்று மாலையே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.