39 நாளில் 223 கோடி ரூபாய் வருமானம்.! சபரிமலையில் குவியும் பக்தர்கள்.!

கடந்த 39 நாட்களில் 223 கோடி வருமானம் கிடைத்துள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது. 

கேரளா, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு ஜோதி தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்கள் யாத்திரையை தொடர்ந்து வருகின்றனர்.

இன்று நடை திறந்து 41வது நாள் ஒரு மண்டலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு மண்டல பூஜை மதியம் 12.30 மணியளவில் தொடங்க உள்ளது. நடை திறந்து 39 நாள் வருமானத்தை நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

கடந்த 39 நாட்களில் 223 கோடி வருமானம் கிடைத்துள்ளது எனவும் , சுமார் 29 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment