‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம்.! கதாநாயகி யார் தெரியுமா ?

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம்.! கதாநாயகி யார் தெரியுமா ?

Default Image

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் ரக்சிதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர் . இந்ந சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் செந்தில்குமார். இவர் இதில் அரவிந்த் மற்றும் மாயன் கேரக்டரில் நடிக்கிறார். அதனையடுத்து மாயனின் மனைவியான தேவியாக ரக்ஷா ஹோலா மற்றும் கார்த்திக்கின் மனைவியான தாமரையாக ரஸ்மி ஜெயராஜ் நடித்திருந்தார் . தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் குறைந்த ஆட்களை கொண்டு படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் முதல் பாகத்தை நிறுத்தி விட்டு இரண்டாவது சீசனை தொடஙகவுள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த ஹீரோயின்கள் இதில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய ரக்ஷா, நான் பெங்களூரில் இருப்பதால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும், அந்த சீரியலின் நெருங்கிய நபர் ஒருவர் சில தகவல்களை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் சீசன் 2வை எடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், அதில் ஒரு கதாநாயகியாக சரவணன் மீனாட்சி தொடர் ரக்சிதா நடிக்கவுள்ளதாகவும், ஹீரோவாக செந்தில் நடிப்பதாகவும் கூறியுள்ளார். இது ஒரு சில ரசிகர்களுக்கு சற்று வருத்தமான செய்தியாக தான் இருக்கும்.

Join our channel google news Youtube