ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்துள்ளார்.
  • விரைவில் ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி குறித்தும், அகழாய்வு பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்ட  அமைச்சர் தங்கம் தென்னரசு, பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கள், மணிகள், தங்கத்திலான பொருட்கள் உள்ளிட்ட ஆய்வு பணியின்போது கண்டெடுக்கப்பட்டவற்றை பார்வையிட்டுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்குக்கு பின்பு தற்போது மீண்டும் ஆய்வு பணிகள் தொடங்கி இருப்பது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு விரைந்து வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். விரைவில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்துள்ள அவர், இந்த அருங்காட்சியகம் உலக அளவில் பேசக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal