தேடி வந்த கலகலப்பு 3 வாய்ப்பு! வேண்டாம் என்று மறுத்த கவின்?

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மக்களை சிரிக்க வைத்த திரைப்படம் கலகலப்பு. இதில் முதல் பாகமும் இரண்டாவது பாகமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. சுந்தர் சியை பொறுத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டது என்றாலே அதனுடைய அடுத்தடுத்த பாகங்களை அவர் எடுப்பது உண்டு.

அப்படி தான் தற்போது அவர் அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் கவின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என முன்னதாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து சுந்தர் சி தரப்பில் இருந்து படத்தில் கவின் நடிக்கவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

வயசானாலும் உங்க அழகு இன்னும் போகல! நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஆனால், உண்மையிலேயே இந்த கலகலப்பு 3-யில் நடிக்க வைக்க நடிகர் கவினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், கவின் சமீபகாலமாக கமர்ஷியல் படங்கள் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் கலகலப்பு 3 கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதால் நடிக்க யோசித்தாராம்.

எனவே, தான் படத்தில் நடிக்க யோசித்து சொல்கிறேன் என்பது போல கவின் கூற படத்தை வேறு நடிகரை வைத்து எடுக்க சுந்தர் சி முடிவெடுத்துவிட்டாராம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும்,  நடிகர் கவின் தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment