பா.விஜயுடன் இணையும் கிழக்கு சீமையிலே படத்தின் பிரபலம் !

தமிழ் சினிமாவில்  ஆத்தங்கரை மரமே பாடலைக்கேட்டதும் நினைவுக்கு வருபவர் நடிகர்  விக்னேஷ் . கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் ஒரு கட்டத்துக்கு மேல் வாய்ப்புகள் இல்லாததால் அதிக படங்களில் நடிக்க வில்லை.

படம் தயாரித்து நஷ்டம் ஆனதால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அந்த பிரச்சனை தீர்ந்து விட்டதாம். தற்போது மீண்டும் பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் இவரது அம்மா சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டாராம். அவரை மகாநதியில் கமல் மகளை தேடியதை போல தேடி வருகிறாராம். அவரை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என ஆவலோடு இருக்கிறார்.

இவர் தற்போது பெண்களுக்கான ஹாஸ்டலும், ஆண்கள் தங்கும் மேன்சனையும் நடத்தி வருகிறாராம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment