27 நட்சத்திரகாரர்களுக்கும் உண்டான ஒரே பரிகார ஸ்தலம்.!

பரிகார ஸ்தலம்- இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத 12 ராசி சக்கரங்களைக் கொண்ட சிவன் பீடம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் ,ஒவ்வொரு நட்சத்திர காரர்களும் வழிபடும் முறைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆலயம்  அமைந்துள்ள இடம்:

திருச்சி மாவட்டத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் பவளவாடியில் இருந்து  ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.காலை 7-இரவு 7 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் .

ஆலயத்தின் சிறப்பு:

இங்கு கோவிலின் பீடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் சுற்றி வரும் எண்ணிக்கை உள்ளது அதன்படி சுற்றி வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். சாரங்க சித்தரின் ஜீவசமாதி அருகிலேயே அமைந்துள்ளது அவர்தான் இக்கோவிலை வடிவமைத்தவர். மேலும் இங்கு அமைந்துள்ள சத்திரம் ராணி மங்கம்மாவால் கட்டப்பட்டுள்ளது.

இங்கு  அமைந்துள்ள ராசி சக்கரத்தின் ஒவ்வொரு படியும் ஒவ்வொன்றையும் குறிக்கிறது. மேலும்  27 நட்சத்திரங்களுக்கும் தல விருச்சகம் அமைந்துள்ளது. நம்முடைய நட்சத்திரத்திற்கு உண்டான விருட்சத்தில் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தால் நம் தோஷங்கள் அகழும் என நம்பப்படுகிறது.

இத்திருத்தலத்தில் அமைந்துள்ள தெப்பக்குளம் அக்னி மூலையில் அமைந்துள்ளது, இதுபோல் ஒரு சில ஆலயங்கள் மட்டுமே அமைந்திருக்கும். இவ்வாறு அமைந்திருந்தால் சிறந்த பரிகார ஸ்தலம் என கூறப்படுகிறது. இதுபோல் திருநள்ளாறு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற ஒரு சில இடத்தில் மட்டுமே அமைந்துள்ளது. மேலும் இந்த ஆலயம் 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் உள்ள மூலவர் ராசி சக்கரத்தின் மீது காட்சியளிக்கிறார் இது தனி சிறப்பகும் .

வழிபடும் முறைகள்:

ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு உண்டான    நட்சத்திர நாள் அன்று  வந்து ,[உதாரணமாக  உங்கள் நட்சத்திரம்  அஸ்வினி என்றால்  அந்த நட்சத்திர நாளன்று]  ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பகுதியில் விளக்கேற்றி வழிபாடு செய்து, பிறகு அங்குள்ள ஸ்தல மரத்தில் உங்கள்  உண்டான நட்சத்திர  மரத்தில் தண்ணீர் ஊற்றி, எத்தனை முறை என்று உள்ளதோ அதை வலம்  வர வேண்டும். இவ்வாறு செய்யும் போது அந்த மரம் வளர வளர உங்களுடைய தோஷங்கள் அகலும் என நம்பப்படுகிறது.

ஆகவே ஒவ்வொரு ராசிக்காரர்களும் உங்கள் நட்சத்திர நாள் அன்று வந்து இங்கு வழிபாடு செய்து நற்பலனை பெற்றுச் செல்லுங்கள்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment