இன்று விஜயகாந்த்-பிரமலதா டிஸ்சார்ஜ்! மருத்துவமனை நிர்வாகம் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவும் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவிற்கும்  அண்மையில் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இருவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மியாட் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

 

author avatar
kavitha