மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடக்கம்!

மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடக்கம்!

meyor priya

சென்னை மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடங்கப்படும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சி 2023 – 24ம் பட்ஜெட் கூட்டத்தொடரில், பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து உடனடி தீர்வு காணும் வகையில் ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து உடனடி தீர்வு காணும் பொருட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடங்க உள்ளது. அதன்படி, மக்களை தேடி மேயர் திட்டம் மூலம் ராயபுரம் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற உள்ளார் மேயர் பிரியா.

Join our channel google news Youtube