களத்தில் இறங்கிய இந்தியன்.! வெறித்தனமான தோற்றத்தில் உலகநாயகன்.! வெளியான வைரல் புகைப்படங்கள்….

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

indian 2

படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்- இந்த மாதிரியான வாய்ப்பு கிடைகிறது ரொம்ப கஷ்டம்… ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஓபன் டாக்..!

indian 2

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், க்ரேன் விபத்து காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

indian 2 kamal

இதனை தொடர்ந்து மீண்டும் இன்று முதல் கமல் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ஷங்கருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அறிவித்துள்ளார். முறுக்கு மீசையுடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment