கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு விஜய் நட்பு.!- தாடி பாலாஜி.!!

விஜய்யுடன் இருக்கும் நட்பு குறித்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் பாலாஜி . விஜய், அஜித், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட BMW -வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கினார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்த கொண்டு நடனம் செய்து வருகிறார். இந்நிலையில், இந்த வார நடைபெறும் எப்பிஸோடில் விஜய்யுடன் இருக்கும் நட்புறவை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது “கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு விஜய் நட்பு.. அவர் கூட 8 வருஷமா நட்புல இருந்தேன்..படப்பிடிப்பை தாண்டி அவருடன் தான் இருப்பேன்..ஒரு தடவை எனது அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போயிவிட்டது. நான் படப்பிடிப்பில் டென்ஷனாக இருக்கும் போது என்னை விஜய் கூப்பிட்டு.. எனக்கு முன்னாடியே மருத்துவமனைக்கு சென்று 1 லட்சம் பணம் கொடுத்தார்” என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.