சிறையில் இருந்து கூலிங்கிளாஸ் மற்றும் ஷூ உடன் நீதிமன்றம் வந்த பிரபல ரவுடி .!

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சோழன் இவர் மீது காலப்பட்டு சந்திரசேகர் கொலை , முத்தியால் பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை  உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சோழன் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக மத்திய சிறையில் இருந்து சோழனை புதுச்சேரி காவல் துறையினர், புதுச்சேரி நீதிமன்றத்தில்  அழைத்து வந்தனர்.

அப்போது ரவுடி சோழன் கூலிங்கிளாஸ் மற்றும் ஷூ அணிந்து கூட்டாளியுடன் திரைப்பட பட ஹீரோ மாதிரி நடந்து வந்துள்ளார். மேலும் அங்கிருந்த தனது ஆதரவாளர்களை பார்த்து கும்பிடும், கையசைத்து  நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரது ஆதரவாளர்களில் ஒருவர் ரவுடி சோழன்நடந்து வருவதை வீடியோவாக எடுத்து அதை ரஜினி நடித்துள்ள “தர்பார்” படத்தின் பாடல் உடன் ஒப்பிட்டு டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோவை சமூக வலைத் வைரலாக பரவி வருகிறது.

author avatar
murugan