நடிகர் சிம்புவுக்கு விருந்து வைக்கும் இயக்குனர்! காத்திருக்கும் தரமான சம்பவம்…

பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் கைகோர்த்து தனது 48வது திரைப்படத்தில் நடிக்க போகிறார். தற்காலிகமாக ‘STR48’ என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கும் நிலையில், இந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் தேசிங் பெரியசாமி, பிரபல ஊடகமான சினிமா விகடனுக்கு பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பேசிய தேசிங் பெரியசாமி, STR ஒரு பேட்டியில் ”நா காட்டு பசியில் இருக்கிறேன்’ என்று சொல்லிருந்தார்.

அதுபோல், ‘STR48’ படம் நிச்சயம் சிம்புவுக்கு ஒரு விருந்தாக இருக்கப்போகிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பக்கா லோக்கல் பீரியட் பிலிமாக இருக்கும், ஒரு ஹீரோ எப்படி ஒரு படத்தில் அது பண்ணிரலாம் இத பண்ணிரலாம் என்று நினைப்பார்களோ அதெல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் டான்ஸ், ஸ்டண்ட் என சிம்பு எல்லாத்தையுமே பண்ணுவார். தாயரிப்பாளர் தில் ராஜு சொன்ன டயலாக் போல, இந்த படத்தில் எண்ணலாம் வேணுமோ அதெல்லாம் இருக்கு.

ரஜினிக்கு சொன்ன அந்த கதையில் தான் சிம்பு நடிக்கிறார்! உண்மையை உடைத்த தேசிங் பெரியசாமி!

கதையில் நிறைய கேரக்டர்கள் இருப்பதால், நிச்சயம் புதுசா இருக்கும். படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பதால் கதையை கமல் சார்கிட்ட சொன்னேன். அவருக்கும் கதை ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் கதையை கேட்டதும் “தம்பியோட ஒட்டு மொத்த திறமைக்கும் தீனியாக இருக்கபோகிறது” என்று கமல் சார் சொன்னதாக இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

இரட்டை வேடம்

சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், தனது கதாபாத்திரத்திற்காக தாய்லாந்தில் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார், மேலும், சில தீவிர உடற்பயிற்சிகளுக்காக சமீபத்தில் லண்டனுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.