தசரா நிகழ்ச்சியில் நடந்த கொடுமை.! 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்.!

சத்தீஸ்கரின் கபீர்தாம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) தசார விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது, தனது தாத்தாவுடன் அங்கு நடைபெற்ற தசார விழாவைக் காணச் சென்ற மூன்று வயது சிறுமியை 40 வயதான ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கவர்தா சிட்டி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சிறுமிக்கு தாகம் எடுத்ததால், அருகில் உள்ள வீட்டிற்கு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார்.

தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது அந்த சிறுமியை காணவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் தாத்தா அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பித்துள்ளார் அப்பொழுது அங்கிருந்த ஒரு வீட்டில் இருந்து சிறுமியின் அழுகை சத்தத்தைக் கேட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அங்கே, ஒரு நபர் அந்த சிறுமியைப் பிடித்து வைத்துள்ளார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டப்பிறகு, காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சம்பா இடத்திற்கு வந்து, துர்கேஷ் படேல் என்கிற அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட துர்கேஷ் படேல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோவில் துர்கேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.