3 வருடங்களாக என்ன செய்தீர்கள்.! சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடியில் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர அவருக்கு உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த மார்ச் மாதம் 29- ஆம் தேதி சென்னையை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ஞானவேல்ராஜா தரப்பிலிருந்து அடுத்ததாக “மிஸ்டர் லோக்கல்” பணத்தால் எனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனக்கு அந்த கதையை பிடிக்கவில்லை இருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன், உண்மை நிலவரம் இப்படியிருக்க படம் வெளியாகிய சில ஆண்டுகளுக்கு பின் இப்போது வழக்கு தொடர்வது ஏன். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் சிவகார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என பதில் மனு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது சம்பள பாக்கி தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன் எனவும், வருமானவரித்துறை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மற்றோரு மனுதாக்கல் செய்தது என் என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.