கொடூர லுக்கில் பாபி தியோல்! கங்குவா படத்தின் புதிய போஸ்டர்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். பிரபல நடிகரான பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரெடின் கிங்ஸ்லி, பி.எஸ். அவினாஷ், கோவை சரளா, யோகி பாபு, ஆராஷ் ஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

சினிமா உயிரோடு இருக்க ரஜினிகாந்த் தேவை! தம்பி ராமையா புகழாரம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம் 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் எப்போதுதான் வெளியாகும் என படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஒரு அப்டேட் நாளை வரும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல் பிறந்தநாள் என்பதால் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய கதாபாத்திரத்திற்கான போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் மிரட்டலான கொடூர லுக்கில் நடிகர் இருக்கிறார். கண்டிப்பாக அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது.

விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன்! காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!

ஏற்கனவே இவர் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி அடைந்த அனிமல் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரமும் அவருக்கு பெரிய அளவில் பேசப்பட்டது போல் இந்த கதாபாத்திரமும் பேசப்படும் என ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment