மீண்டும் கொண்டாட்டத்துடன் ஆரம்பித்த செம்பருத்தி தொடர்.! என்ன விசேஷம் தெரியுமா.?

மீண்டும் கொண்டாட்டத்துடன் ஆரம்பித்த செம்பருத்தி தொடர்.! என்ன விசேஷம் தெரியுமா.?

Default Image

செம்பருத்தி சீரியலின் இயக்குநர் ரவி பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி. தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக பலரும் மிஸ் செய்கின்ற தொடர் என்றால் அது செம்பருத்தி தான் என்றே கூறலாம்.ஆம் கடந்த மாதம் மார்ச் முதல் மே மாதம் வரை தொடர்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் தமிழக அரசு 60பேருடன் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கியதை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த காரணத்தினால் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்து. அதனையடுத்து விதித்த தளர்வுகளினால் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மாஸ்க் அணிந்து கொண்டு செம்பருத்தி சீரியலுள்ள ஷபானா, கார்த்திக் ராஜ், பிரியராமன் உள்ளிட்ட ஒரு சிலருடன் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்புகளை தொடங்கியுள்ளனர். ஆம் செம்பருத்தி சீரியல் இயக்குநரான ரவி பாண்டியனின் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி கோலாகலமாக ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

 

Join our channel google news Youtube

உங்களுக்காக