அடேங்கப்பா! அதர்வா தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

அடேங்கப்பா! அதர்வா தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

Akash atharva

பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் விஸ்ணு வரதன் அடுத்ததாக அதர்வாவின் தம்பி ஆகாஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தினை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கிறார். சேவியர் பிரிட்டோ வேறு யாரும் இல்லை ஆகாஷ் மாம் தான்.

சேவியர் பிரிட்டோமகள் சினேகாவும், அதர்வாவின் தம்பி ஆகாஷ் இருவருக்கும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது. எனவே தனது மருமகனை வைத்து சேவியர் பிரிட்டோ ஒரு படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்து தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு SK21வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு.!

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 40 கோடி என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வழக்கமாக விஷ்ணுவர்தன் இயக்கும் படங்கள் எல்லாம் அற்புதமாக இருக்கும் எனவே அவர் அதர்வாவின் தம்பியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருவதால் இந்த திரைப்படம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.  படத்தை ஆகாஷின் மாமாவை தயாரிப்பதால் பட்ஜெட் பற்றி எந்த கவலையும் இல்லாமல் படம் நன்றாக வந்தால் போதும் என செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே கிட்டத்தட்ட 40 கோடி அளவில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படத்தில் மற்ற அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube