தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வளாகத்தில் பிரபல பாலிவுட் நடிகரின் உடல்!

தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வளாகத்தில் பிரபல பாலிவுட் நடிகரின் உடல்!

Default Image

ஹிமாச்சல் மாநிலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வளாகம் ஒன்றில் பாலிவுட் நடிகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

வோஹ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆசீப் பஸ்ரா. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இவர் பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வந்தார்.  இந்நிலையில் தமிழில் அஞ்சான் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாகிய இவர், இன்று தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தபடி சடலம் ஒன்று இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த பொழுது அது பிரபல நடிகர் பஸ்ரா என்பது அறிந்து உடனடியாக உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதிர்பாராத இவரது தற்கொலை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீடு ஒன்றில் இவர் வசித்து வந்ததாகவும், அவருடன் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி காதலி என்று கூறி அவருடன் தங்கியிருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் சரியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Join our channel google news Youtube