தமிழர்கள் 7 பேரின் உடல்கள் தனித்தனி வாகனங்களில் அனுப்பிவைப்பு.!

Kuwait Building Fire [file image]

சென்னை :குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனி வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் அல்-மாங்கஃப் நகரின் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

இதில், கேரளாவை சேர்ந்தவர்கள் 24 பேர்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேர், எஞ்சியவர்கள் ஆந்திரா, பிஹார் போன்ற மாநிலங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களின் உடல் விமானப்படை சிறப்பு விமானம் மூலம், இன்று காலை கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அப்பொழுது, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் ஆகியோர் உயிரிழந்தோருக்கு விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 7 தமிழர்களின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு தனித்தனி வழியாக, ஆம்புலன்ஸில் தலா இரு ஓட்டுநர், ஒரு காவலர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.