தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்… தீமைகள்..!

முட்டையில் மஞ்சள் கருவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு முட்டை , மேலும் முட்டையை தினமும் தொடர்ந்து சாப்பிடலாமா,  சாப்பிடக்கூடாதா என்று சிலர் தயங்குவர் ஆனால் முட்டையை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

நன்மைகள் மற்றும் தீமைகள்;

வளர்ச்சி குழந்தைகள் தினமும் ஒரு முட்டையை அவித்து சாப்பிட்டு வந்தால் மிகவும் ஆரோக்கியம் என்று கூறப்படுகிறது வைட்டமின் A வைட்டமின் C நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கிறது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது மேலும் உடலை வளைத்து வேலை பார்த்த வேலை செய்பவர்கள் ஒரு தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சக்திகள் கிடைக்கும்.

மேலும் முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 லிருந்து 4 முட்டைகள் வரை சாப்பிடலாம் , மேலும் இரவு நேரங்களில் முட்டை சாப்பிடுபவர்கள் முட்டை சாப்பிடுவதில் எந்த விதமான தவறும் இல்லை. மேலும் தூங்கப் போவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பு முட்டை சாப்பிட வேண்டும்.

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது ,ஏனென்றால் அது உடம்பில் கொழுப்புச்சத்தை ஏற்படுத்தி இதய நோயை உண்டாக்க கூடும் மேலும் உடற்பயிற்சி செய்து விட்டு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் தலைமுடி நன்றாக கருகருவென வளரும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.