நெருங்கும் தேர்தல்..! சத்தீஸ்கர், ராஜஸ்தானில் அமலாக்கத்துறை சோதனை..!

இந்திய தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கானஅட்டவணை வெளியானதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும் தேர்தல் நடையேற உள்ளது. இதுபோன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவ.14ம் தேதியும், ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவ.23ம் தேதியும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் நவம்பர் 30ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

வருமான வரி சோதனை: அரசியலாக்க வேண்டாம் – கரு.நாகராஜன்

அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதனையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதன்படி, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  தேர்தல் நடைபெற உள்ள சதிஷ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  மகாதேவ் என்ற பெயரில் செயலி நடத்தி பணத்தை ஏமாற்றியதாக வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயலி மூலம் ஏமாற்றிய பணத்தை அரசியல்வாதிகளுக்கு கொடுத்ததாகவும் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும், ரூ.5 கோடி ரொக்கம் பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் 2-வது நாளாகவும், ராஜஸ்தானில்  இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.