எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த அசத்தல் ‘கிஃப்ட்’? இன்னும் வைத்திருக்கும் நடிகர் சத்யராஜ்!

எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த அசத்தல் ‘கிஃப்ட்’? இன்னும் வைத்திருக்கும் நடிகர் சத்யராஜ்!

sathyaraj and MGR

எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி  சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவருக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மக்களை போலவே, சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள் கூட எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தான். அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து நடிப்பாலும், பல உதவிகளை செய்து நல்ல மனிதராகவும் அவர் இருந்ததால் எம்.ஜி.ஆரை பலருக்கும் பிடிக்கும்.

அப்படி தான் நடிகர் சத்யராஜூம் கூட, சத்யராஜ் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் உடைய தீவிர ரசிகராக இருந்தாராம். பிறகு சினிமாவிற்குள் நடிக்க வந்த பின் படங்களில் நடித்துவிட்டு எம்ஜிஆரை பார்க்க அவருடைய வீட்டிற்கே அடிக்கடி செல்வாராம். அந்த சமயம்  சத்யராஜ் வளர்ந்து கொண்டிருந்த காலம் என்பதால் எம்ஜிஆரும் அவருக்கு அட்வைஸ் கொடுப்பாராம்.

Sarvadhikari : நம்பியாரை வேற லெவலுக்கு கொண்டு சென்ற எம்ஜிஆர்? ‘சர்வாதிகாரி’ பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம்!

பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்தபின் நான் சிறிய வயதில் இருந்தே உங்களுடைய தீவிர ரசிகன் என்று கூறிவிட்டு உங்களிடம் இருந்து நினைவாக எனக்கு எதாவது கொடுங்கள் நான் அதனை பத்திரமாக வைத்துக்கொள்கிறேன் என சத்யராஜ் கூறினாராம். பிறகு எம்.ஜி.ஆர் எதனை பரிசாக கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டு இருந்தாராம். அதன் பின் சத்யராஜ் ஒரு கர்லா கட்டையை பார்த்தாராம்.

கர்லா கட்டையை பார்த்தவுடன் சத்யராஜிற்கு மிகவும் பிடித்து போக உடனடியாக நான் இதை உங்களுடையாக நினைவாக எடுத்துகொள்ளவா என்று எம்ஜிஆரிடம் கேட்டாராம். பிறகு இவ்வளவு ஆசைப்பட்டு கேட்கிறார் என்பதால் எம்ஜிஆர் பரிசாக அந்த கர்லா கட்டையை கொடுத்தாராம். கர்லா கட்டை கிடைத்தவுடன் சத்யராஜ் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்.

Rajinikanth : தீராத பகையின் உச்ச கட்டம்! ரஜினி -சத்யராஜ் சண்டைக்கு காரணம் என்ன தெரியுமா?

அவர் கொடுத்த அந்த கர்லா கட்டையை வைத்து தான் நடிகர் சத்யராஜ் இன்றுவரை உடற்பயிற்சிகளை செய்துகொண்டு வருகிறாம். எம்ஜிஆர் கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவருடைய நியாபகமாக இன்னும் அதனை வைத்து இருக்கிறாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube