டெஸ்ட் போட்டி.! மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்.!

  • இந்தியா , நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
  • இந்திய அணி 55 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா , நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையெடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

Image

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே பிருத்வி ஷா 16 ரன்னில் வெளியேறினார். பின்னர் புஜாரா இறங்கினார். இறங்கிய சில நிமிடங்களில் 11 ரன்னுடன் விக்கெட்டை இழந்தார்.

Image

நிதானமாக விளையாடி வந்த மாயங்க் அகர்வால் 34 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் கேப்டன் கோலி வந்த வேகத்தில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இதையெடுத்து ரிஷாப் பந்த் , ரஹானே இருவரும் விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

களத்தில் ரிஷாப் பந்த் (10) , ரஹானே(38) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.இந்திய அணி 55 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்து உள்ளனர்.