குழந்தைகளுக்கான YouTube-யில் அபாயகரமான வீடியோக்கள் உலவுகிறதாம்! அதிர்ச்சி ரிப்போர்ட்
தொழிற்நுட்ப வளர்ச்சி கிடுகிடுவென ஏறினாலும் அதன் பாதிப்பு ஏதோ ஒரு வகையில் ஒரு சாராரை பாதிப்பதுண்டு. பல நேரங்களில் ஒட்டு மொத்த மக்களையும் இது ஆபத்தான நிலைக்கு தள்ளுகின்றது. இதில் சமூக ஊடகங்கள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பங்கு மிக முக்கியமானது தான்.
என்றாலும், இதனால் ஏற்பட கூடிய மோசமான தாக்கங்களும் இதில் அடங்கும். இதில் YouTube மட்டும் விதிவிலக்கல்ல. பொதுவாகவே YouTube-யில் ஆபாசமான வீடியோக்களை அந்நிறுவனம் தடை செய்துள்ளது. இதை மீறியும் இதில் ஏராளமான மோசமான வீடியோக்கள் உலா வருகின்றது.
தனித்துவம்
18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே உருவானது தான் இந்த Youtube kids என்கிற இணையதளம். இதில் ஆபாசம், இரத்தம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற காட்சிகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பு. ஆனால், தற்போது இதில் மிக ஆபத்தான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆபத்து
சமூக ஆர்வளரான புளோரிடாவை சேர்ந்த ப்ரீ ஹெஸ் என்பவர் சமூக விரோத செயல்களையும் வதந்திகளையும் பரப்ப கூடிய வீடியோக்களை பற்றி ஆய்வு செய்து அவரது இணைய பக்கத்தில் எழுதி வருகின்றார். இந்த ஆராய்ச்சியின் போது யூடியூப் கிட்ஸ்-யில் உலா வருகின்ற சில ஆபத்தான வீடியோக்களை இவர் கண்டறிந்துள்ளார்.
வீடியோக்கள்
யூடியூப் கிட்ஸ்-யில் ஒரு குழந்தை தற்கொலை செய்து கொள்வது போன்றும், கையை அறுத்து கொள்வது போன்றும், தற்கொலையை எவ்வாறு செய்வது போன்று வீடியோக்கள் உலா வருகிறது.
இதை பார்த்த ஹெஸ் இதை பற்றிய தனது கண்ணோட்டத்தை தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பலருக்கு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி இதை பற்றி யூடியூப் நிறுவனம் ஏதேனும் திருத்தம் கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.